மாணவர் தலைவர்களை தடுத்து வைக்கும் ஆவணத்தில் கையெழுத்திட ஜனாதிபதி மறுப்பு!

Mayoorikka
1 year ago
மாணவர் தலைவர்களை தடுத்து வைக்கும் ஆவணத்தில் கையெழுத்திட ஜனாதிபதி மறுப்பு!

இலங்கையின் ஜனாதிபதியாக அரசியலமைப்பு ரீதியாக தன்னை இணைத்துக் கொண்ட நான்கு மாதங்களுக்குப் பின்னர், ரணில் விக்கிரமசிங்க, அரசியல் ரீதியாகவும் மற்ற வகையிலும் பல மாற்றங்களுக்கு தலைமை தாங்கி வருகிறார்.

அந்த வகையில் பல்கலைக்கழக மாணவர் தலைவர்கள் இருவர் மீதான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் தடுப்புக் காவல் நீடிப்பு ஆவணத்தில் அவர் கையெழுத்திட மறுத்துவிட்டார்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் கல்வௌ சிறிதம்ம தேரர் ஆகியோர் கடந்த மூன்று மாதக்காலமாக தடுத்து வைக்கப்பட்;டுள்ளனர்.

அவர்கள், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமையன்று உத்தரவு காலாவதியானது.

அதே நாளில், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் உறுப்பினர்கள், அவர்களை விடுவிக்கக் கோரி பம்பலப்பிட்டியில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெலிக்கடை சிறைச்சாலையை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது பாதுகாப்பு வளையங்களை உடைத்ததையடுத்து பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தநிலையில் குறித்த இருவரையும் தொடர்ந்தும் தடுத்து வைக்கும் உத்தரவில் கையெழுத்திட பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மறுத்துள்ளார்.

இது உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் அவருக்கும் அரசாங்கத்துக்கும் விடுக்கப்பட்டு வந்த அழுத்தத்தின் பிரதிபலிப்பாகும்.

குறிப்பாக ஜெனீவா மனித உரிமைகள், பேரவை மற்றும் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை வழங்கிக்கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அழுத்தப் பிரதிபலிப்பே இதுவாகும் என்று கருதப்படுகிறது.

இதனையடுத்து குறித்த பிரச்சினை, சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழேயே பார்க்கப்படும் என்று அரசாங்கத்தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!