விமல் வீரவன்சவின் கருத்தால் குழம்பிப்போன கோட்டாபய: மறுப்பு வெளியிட்ட அமெரிக்க தூதரகம்

Mayoorikka
1 year ago
விமல் வீரவன்சவின் கருத்தால் குழம்பிப்போன கோட்டாபய: மறுப்பு வெளியிட்ட அமெரிக்க தூதரகம்

உத்தர லங்கா சபையின் தலைவர் விமல் வீரவங்சவின் கருத்துக்கள் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கடந்த வாரம் குழப்பமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த நிலையில், நாட்டை விட்டு செல்வதற்கு முன்னர் அவரை கொலை செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக விமல் வீரவன்ச, தனியார் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்திருந்தார்.

அத்துடன் இந்த செயற்பாட்டுக்கு அமெரிக்காவின் தூதுவரும் பங்காக இருந்தார் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தகுழப்பமான தகவல்களை வெளியிட்டதையடுத்து, இந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச குழப்பத்தில் இருந்தார்.

எனினும் இந்த கருத்தை அமெரிக்கத் தூதரகம் முழுமையாக  நிராகரித்து விட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!