சுவிஸ் நாட்டில் எதற்காக மொழியறிவு கட்டாயத்தேவை ஆக்கப்பட்டது? - உள்ளே தகவல்

Prasu
2 years ago
சுவிஸ் நாட்டில் எதற்காக மொழியறிவு கட்டாயத்தேவை ஆக்கப்பட்டது? - உள்ளே தகவல்

Deutsch Kurs (c) - மொழியறிவுக் கோரிக்கை யாருக்கெல்லாம் தேவை.?

C- வதிவிட அனுமதிக்கான டொச் மொழியறிவுக் கோரிக்கை எதற்கெல்லாம் டொச்மொழியறிவிற்கான சான்று தேவைப்படுகின்றது?
C-வதிவிட அனுமதி கோரலின் போது / சுவிஸ் நாட்டுப் பிரஜாவுரிமை கோலும் போது
முன் கூட்டிய C-வதிவிட அனுமதி கோரலின் போது (முழுக்குடும்பமும் டொச் மொழியறிவுற்கான சான்று காட்டவேண்டும்)
வழக்கமான C- வதிவிட அனுமதி கோரலுக்கு வாய்ப்பு இல்லாத போது ( தனிப்பட்ட நபர்கள் சான்றுகளைத் தனித்தனியாகத் தரலாம்)

யாருக்கு டொச்மொழிக்கான சான்றுகள் தேவைப்படுகின்றன?

  • வதிவிடவுரிமை C- கோரும் போது நீங்கள் கோரப்படும் டொச்மொழிக்கான சான்றினைத் கொடுக்க வேண்டியவர்கள்: இது மூன்றாம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் மற்றும் ஐரோப்பிய நாட்டினைச் சேர்ந்தவருக்கும் ( இந்த நாட்டினைத் தவிர்ந்தவர்களுக்கு : A, B, D, DK, F, GR, I, FL, NL, P, SP) மற்றும் சுவிஸ்நாட்டுப்பிரஜையின் துணைவர் துணைவியர் அதேபோல் ஏற்கனவே C- வதிவடவுரிமை வைத்திருப்பவரின் துணைவர் துணைவியருக்கும் பொருந்தும்.சுக் நகரில் வசிக்கும் வெளி நாட்டு நபர் சுவிஸ் நாட்டுக் குடியுரிமை கோரலின் போதும்.

எந்த வகையான மொழிச் சான்று கோரப்படுகின்றது?

  • சட்டங்களில் குறிப்பட்ட காரணத்தின் படி மொழியறிவு தரம் வாய்மூலமான கேட்டல் மற்றும் உரையாடுதலில் A2 உம் மற்றும் எழுத்தறிவுப்பகுதியான வாசித்தல் மற்றும் எழுதுதல் போன்றவற்றில் தரம் A1 பெற்றிருக்க வேண்டும். இந்தத் தகுதிநிலைமையை தவிர்க்கப்படக் கூடிய காரணங்களினால் அடைய முடியதாவர்களுக்கு தனிப்பட்ட துல்லிய கணிப்பீட்டிற்கு இங்கே தொடர்பு கொள்ளவும். hier.

எந்த மொழிச்சான்றிதழ்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டவை?

  • GGoethe சான்றிதழ்
  • TELC சான்றிதழ்
  • FIDE சான்றிதழ் (2015 கோடைகாலத்திலிருந்து).

இந்த மொழிச்சான்று ஆதாரங்கள் சுக் நகரத்தில் சான்றிதழுதலுடன் பெறமுடியும்: 

  • Goethe– சான்றிதழ் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டது. பதிவிற்கு www. fmzug.ch /041 728 22 76
  • TELC – சான்றிதழ் ஐரோப்பியாவில் அங்கீகரிக்கப்பட்டது. பதிவிற்கு www. klubschule.ch / 041 727 11 55

C- வதிவடவுரிமை வழங்குவதில் மொழிச்சான்றிதழ்களின் அர்த்தம் என்ன?

மொழியறிவின் தன்மை மட்டுமே வதிவிடவுரிமையை நிர்ணயிக்காது. மேலும் பல காரணிகளைப் பொறுத்தே இது தங்கியிருக்கும். உதாரணமாக: குற்றப்பதிவு, வேலையின்மை மற்றும் நீண்டகாலமாக சமூக உதவி நிறுவனத்தின் பொருளாதாரத்தில் தங்கியிருத்தல் போன்றவை.

மொழியறிவைச் சான்றிதழ் படுத்த முடியாதவர்களைச் சுவிஸ் நாட்டை விட்டு அனுப்பி விடுவார்கள் என்பதில்லை. அவர்கள் B-வதிவிடவுரிமை வைத்திருந்தால் அதையே மீண்டும் பெறுவார்கள். வதிவிடவுரிமை பற்றிய மேலதிக தகவல்களுக்கு Amt für Migration இல் நேரடியாக அல்லது இணையமுகவரியின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

Verwaltungsgebäude 2, Aabachstrasse 1, Postfach 857, 6301 Zug (Tel: 00 41 41 728 50 50)

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!