பொருளாதாரக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் மற்றும் மக்களை அச்சுறுத்தும் தலைவர் ரணில் -சஜித் பிரேமதாச

Kanimoli
1 year ago
பொருளாதாரக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் மற்றும் மக்களை அச்சுறுத்தும் தலைவர் ரணில் -சஜித் பிரேமதாச

பொருளாதாரக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் மற்றும் மக்களை அச்சுறுத்தும் தலைவர், என்று ஜனாதிபதியை விளித்துள்ள,  இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,   ஜனாதிபதியின் இன்றைய நாடாளுமன்ற  உரையை,   கடுமையாக சாடியுள்ளார்.

இரண்டாவது அறகலய (மக்கள் போராட்டத்திற்காக) மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி இராணுவ ரீதியாக ஒடுக்கப் போவதாக, தெரிவித்த  ஜனாதிபதியின்  காட்டுமிராண்டித்தனமான கூற்றை  எதிர்க்கட்சித் தலைவர் கண்டித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அறிக்கையை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ராஜபக்சர்கள், மக்கள் போராட்டத்தால் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி இவ்வாறான தன்னிச்சையான கருத்துக்களை வெளியிடுவதாகக் குறிப்பிட்டார்.

"அரகலயா (போராட்டம்) என்பது குடிமக்களால் மேற்கொள்ளபட்டது. எதிர்காலப் போராட்டங்களும் குடிமக்களால்தான் மேற்கொள்ளப்படும். இந்தநிலையில்  அந்த குடிமக்களை ஒடுக்குவேன் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.    எனினும் பின் கதவு வழியாக ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி,  ​​சில மாதங்களுக்கு முன் நடந்த அரசியல் மாற்றத்தை திரும்பிப் பார்க்க வேண்டும். இதுபோன்ற ஆவேசமான மற்றும் நகைச்சுவையான கூற்றுக்களை, பொதுமக்கள், கருத்திற்கொள்ள வேண்டாம் என்று, சஜித் பிரேமதாச கேட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!