கறுவாத் தொழிலுக்காக புதிய நிறுவனத்தை உருவாக்க 200 மில்லியன் ஒதுக்கியது ஏன்?

Prathees
1 year ago
கறுவாத் தொழிலுக்காக  புதிய நிறுவனத்தை உருவாக்க 200 மில்லியன் ஒதுக்கியது ஏன்?

இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கறுவாபட்டைக்காக புதிய துறையை ஏற்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இது தொடர்பில் கறுவாத் தொழில் தொடர்பான தரப்பினர் பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பித்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, காலி, கரந்தெனிய பிரதேசத்தில் இந்த திணைக்களத்தை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும்இ இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 200 மில்லியன் ரூபா எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கறுவாத் துறைக்கு புதிய திணைக்களம் அமைப்பது நடைமுறைச் சாத்தியமில்லை என பல தரப்பினரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.பி.ஹெய்ன்கெண்டா கூறுகையில், நாட்டில் சிறு ஏற்றுமதி விவசாயப் பயிர்களின் வருமானத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வருமானம் கறுவா மூலம் கிடைக்கிறது.

புதிய திணைக்களத்தை நிறுவுவதற்கு பணத்தை ஒதுக்குவதல்ல, அந்த பணத்தை கறுவாத் தொழிலை மேம்படுத்த பயன்படுத்துவதே செய்ய வேண்டும் என்று டொக்டர் ஏ.பி.ஹெய்ன்கெண்டா மேலும் கூறினார்.

இதேவேளை, இந்த தீர்மானம் தொடர்பில் ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் இலங்கை விஞ்ஞான சேவை அதிகாரிகள் சங்கமும் கருத்து வெளியிட்டுள்ளது.

கறுவா மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளை கையாள்வதற்கு ஏற்கனவே பல நிறுவனங்கள் இருப்பதாக அதன் பிரதி செயலாளர் அருண திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே, கறுவாத் தோட்டங்களை மேம்படுத்துவதற்கு இந்த நேரத்தில் பணத்தை ஒதுக்குவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அருண திஸாநாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!