கோட்டாபயவின் முன்னாள் ஊடகப் பொறுப்பாளர் உள்ளிட்ட குழுவினரால் கையப்படுத்தப்பட்டுள்ள 550 ஏக்கர் நிலம்

Prathees
1 year ago
கோட்டாபயவின் முன்னாள் ஊடகப் பொறுப்பாளர் உள்ளிட்ட குழுவினரால் கையப்படுத்தப்பட்டுள்ள 550 ஏக்கர் நிலம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஊடகப் பொறுப்பாளராக இருந்த சுதேவ ஹெட்டியாராச்சி உள்ளிட்ட குழுவினரால் சிங்கராஜ கொங்கல மலைத்தொடரின் ஐந்நூற்று ஐம்பது ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் சஜீவ சாமிகர விடுத்துள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அஜித் ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளராக இருந்த சுதேவ ஹெட்டியாராச்சி உள்ளிட்ட பலர் 

கொங்கலா மலைத்தொடருக்கு முன்னால் அமைந்துள்ள உள்ளிடுவா கிராம உத்தியொகத்தர் பிரிவைச் சேர்நத கபரகல வனப் பிரிவிற்குட்பட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள 550 ஏக்கரை கையகப்படுத்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, அந்த நிலங்களைச் சுற்றி விவசாயம் செய்து கொண்டிருந்த மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, 41 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுஇ அந்தக் காணிகளைக் கையகப்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த காடுகள் மற்றும் புல்வெளிப் பகுதிகள் அனைத்தும் கிங் ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளாகும்.

மேலும், இந்த மலைச் சரிவுகளில் ஓடும் தண்ணீர்இ சுற்றுவட்டார மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

மேலும், இந்த காடு மற்றும் புல்வெளி அமைப்புகள் சிங்கராஜா தளத்தில் வாழும் பல உயிரினங்களுக்கு வாழ்விடத்தை வழங்கும் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகளாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!