இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ரணிலை சந்திக்க தயாராகும் தமிழ் தேசியக் கட்சிகள்!

Nila
1 year ago
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ரணிலை சந்திக்க தயாராகும் தமிழ் தேசியக் கட்சிகள்!

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கும் போது வலியுறுத்த வேண்டிய விடயங்கள் குறித்து தமிழ் தேசியக் கட்சிகள் தீர்மானங்களை எடுத்துள்ளன.

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தமிழ் தேசியக் கட்சிகளுடன் பேச்சுவாரத்தை நடத்தப்படும் என ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.

அத்துடன், எதிர்வரும் 11ஆம் திகதி இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் எடுக்க வேண்டிய தீர்மானங்கள் குறித்து சர்வகட்சி மாநாடு ஒன்றுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தநிலையில், தமிழ் மக்களின் அபிலாஷைகளை முன்னிறுத்தும் வகையில் ரணிலுடனான பேச்சுவார்ததையின் போது கோரிக்கைகளை முன்வைப்பதற்காக இன்று தமிழ் தேசியக் கட்சிகள் கொழும்பில் கூடின.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூடிய இந்தக் கூட்டத்தின் போது நில அபகரிப்பு நிறுத்தப்பட்டு அபகரிக்கப்பட்ட நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், அதிகார பகிர்வு சம்பந்தமான அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை அமுல்படுத்தி மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட்ட வேண்டும், உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த வடகிழக்கு பிரதேசத்தில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரப்பகிர்வுடனான புது அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்த ஒழுங்குமுறை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவதை நாம் வரவேற்கிறோம் போன்ற தீர்மானங்கள் ஒருமித்த அளவில் எடுக்கப்பட்டன.

அத்துடன், இன்றைய கூட்டத்தில் பங்கேற்காத ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளின் ஆலோசனைகளையும் உள்ளடக்கி அதனை ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, இன்றைய கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன்,எம்.ஏ.சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன், கோவிந்தம் கருணாகரன், வினோ நோகராதலிங்கம்,எஸ்.சிறிதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!