தற்போதைய இக்கட்டான நிலைக்கு எவரேனும், தாமே காரணம் என்று கூறினால், அது தவறாகும் - அஜித் நிவார்ட் கப்ரால்

Kanimoli
1 year ago
தற்போதைய இக்கட்டான நிலைக்கு எவரேனும், தாமே காரணம் என்று கூறினால், அது தவறாகும் - அஜித் நிவார்ட் கப்ரால்

தற்போதைய இக்கட்டான நிலைக்கு எவரேனும், தாமே காரணம் என்று கூறினால், அது தவறாகும். தாம் மட்டுமல்ல, முன்னைய அரசாங்கம், முன்னைய அமைச்சரவை, நிதி அமைச்சர் என, அனைவரும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார வீழ்ச்சி குறித்து அண்மையில் வெளியிடப்பட்ட 'பொருளாதார பாதிப்புக்கு மத்தியில்' என்ற பிரசுரத்தில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அனைத்து நிதி மற்றும் பொருளாதார முடிவுகளும் கூட்டாக எடுக்கப்பட்டதே தவிர ஒருவரால் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடனை செலுத்தத் தவறுவது, ரூபாயை சீராக வைத்திருப்பது, வரியை அதிகரிப்பது அல்லது குறைப்பது மற்றும் இருதரப்பு மற்றும் பலதரப்புக் கடன்களைப் பெறுவது மற்றும் ஐஎஸ்பி வழங்குவது ஆகியவை அமைச்சரவை, நாணயச் சபை மற்றும் நிதியமைச்சரின் ஒப்புதலைத் தொடர்ந்து எடுக்கப்பட்டன.

இந்த முடிவுகள் எதுவும் தாம், ஒருவனாகவோ தன்னிச்சையாகவோ எடுக்கவில்லை. அவை அனைத்தும் கூட்டாக எடுக்கப்பட்ட முடிவுகள் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

எல்லா வெளிநாட்டுக் கடன்களையும் செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதன் மூலம் இலங்கை திவாலானதாக’ கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி அறிவித்தமையானது, சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கைக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் என்று கப்ரால் கூறியுள்ளார்.

இந்த சதியில் பலர் செயற்பட்டதாகவும், இலங்கையை எப்படியாவது திவாலாக்கி நாட்டை சர்வதேச சமூகத்தின் முன் மண்டியிட வைப்பதே அவர்களின் நோக்கமாக இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

தாம் ஆளுநராக இருந்தபோது இந்த திவால்நிலையை, தம்மூடாக, இதனை ஏற்படுத்த இந்த வெளிநாட்டு சக்திகளும் அவர்களின் உள்ளூர் முகவர்களும் எவ்வளவோ முயற்சி செய்ததாகவும், ஆனால் அவர் அந்த வலையில் சிக்காததால், தம்மை "குற்றவாளி" ஆக்கிவிட்டதாகவும் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்

2015 முதல் 2019 வரையிலான ஐந்து ஆண்டுகளில், கடன் பெற்றதன் மூலம் இலங்கையின் கடன் சவால்கள் மோசமடைந்ததாக கப்ரால் குறிப்பிடுகிறார்.

இதன் மூலம் அந்நிய செலாவணி கடன் 23.4 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 38.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக 65% அதிகரித்துள்ளது. அந்த காலகட்டத்தில், 7.0%க்கும் அதிகமான வட்டி விகிதத்தில் சர்வதேச இறையாண்மை பத்திரங்களில் (ISBs) US$ 10 பில்லியன் நிகர கடன் பெறப்பட்டன. வாங்கியதை அவர் குறிப்பிடுகிறார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்றதன் மூலம் 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டன.

2014 ஆம் ஆண்டின் இறுதியில் அந்நிய செலாவணி கையிருப்பு US$ 8.2 பில்லியன் டொலர்களாக இருந்தது. இந்தநிலையில் அந்நிய செலாவணி கையிருப்பு சிறப்பாக நிர்வகிக்கப்பட்டிருந்தால், எந்த நெருக்கடியும் இருந்திருக்காது என்று அவர் வாதிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!