பொங்கலுக்கு வெளியாகிறது 'வாரிசு' : புதிய போஸ்டரை வெளியிட்டு உறுதி செய்த படக்குழு

Nila
3 years ago
பொங்கலுக்கு வெளியாகிறது 'வாரிசு' : புதிய போஸ்டரை வெளியிட்டு உறுதி செய்த படக்குழு

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் பொங்கல் தினத்தில் வெளியாகும் அஜித்தின் ‘துணிவு’ படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளதால் ‘வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாவது சந்தேகம் என சமூக வலைதளங்களில் வதந்தி கிளம்பியது.

இந்த நிலையில் படக்குழுவினர் ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆவதை உறுதி செய்யும் வகையில் அட்டகாசமான போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் காரின் மேல் உட்கார்ந்து டீ கிளாசை விஜய் கையில் வைத்திருப்பது போல் உள்ளது.

அட்டகாசமாக உள்ள இந்த போஸ்டரில் ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆவதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை சத்யம் தியேட்டரில் 'வாரிசு’ படத்தின் பிரமாண்டமான பேனர் வைக்கப்பட்டுள்ளதை அடுத்து ‘வாரிசு’ திருவிழா விஜய் ரசிகர்கள் மத்தியில் தொடங்கிவிட்டது என்று எடுத்துக்கொள்ளலாம்.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4