சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமின் 96 வயதில் காலமானார் !

Nila
1 year ago
சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமின் 96 வயதில் காலமானார் !

சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமின் தனது 96வது வயதில் இரத்தப் புற்றுநோய் மற்றும் பல உறுப்பு செயலிழப்பால் இன்று உயிரிழந்தார் என சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஜியாங் ஜெமின்  அவரது சொந்த நகரமான ஷாங்காயில் இறந்தார் என சீன மக்களுக்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, நாடாளுமன்றம், அமைச்சரவை மற்றும் இராணுவம் மரணத்தை அறிவித்து ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

“தோழர் ஜியாங் ஜெமினின் மறைவு, நமது கட்சிக்கும், நமது ராணுவத்திற்கும் மற்றும் அனைத்து இன மக்களுக்கும் கணக்கிட முடியாத இழப்பாகும்” என்று கடிதத்தில் கூறப்பட்டு, “ஆழ்ந்த வருத்தத்துடன்” இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

“எங்கள் அன்பிற்குரிய தோழர் ஜியாங் ஜெமின்” உயர் மதிப்புமிக்க ஒரு சிறந்த தலைவர், ஒரு சிறந்த மார்க்சிஸ்ட், அரசியல்வாதி, இராணுவ மூலோபாயவாதி மற்றும் இராஜதந்திரி மற்றும் நீண்டகாலமாக சோதிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் போராளி என்று தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!