மருத்துவ உலகில் புரட்சி - அல்சைமர்ஸில் மூளையின் அழிவை மெதுவாக்கும் முதல் மருந்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

Nila
1 year ago
மருத்துவ உலகில் புரட்சி - அல்சைமர்ஸில் மூளையின் அழிவை மெதுவாக்கும் முதல் மருந்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

அல்சைமர்ஸில் மூளையின் அழிவை மெதுவாக்கும் முதல் மருந்து முக்கியமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்சைமர் நோயின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஒரு புதிய மருந்து, நோயின் ஆரம்ப கட்டங்களில் உள்ள நோயாளிகளிடையே நினைவாற்றல் குறைவதைக் குறைத்த பிறகு, சிகிச்சைக்கான தேடலில் ஆரம்பமாக உள்ளதென கூறப்படுகின்றது.

அல்சைமர் நோய் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த நோய் நிலை காரணமாக மூளையின் செல்கள் அழிக்கப்படுகின்றன.

எனவே, இந்நோய்க்கு ஏற்ற வகையில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வெற்றிகரமான முடிவுகள் கிடைத்து வருகின்றன.

அல்சைமர் நோயினால் ஏற்படும் மூளை பாதிப்பு விகிதத்தை குறைக்கக்கூடிய முதல் மருந்து பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அல்சைமர் நோயின் ஆரம்ப கட்டத்தில் lecanemab என்ற மருந்தை கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் உருவாகும் அமிலாய்டை குறிவைத்து அழிக்க வடிவமைக்கப்பட்ட Lecanemab மருந்து நோயாளிகளின் நினைவாற்றல் மற்றும் சிந்தனை குறைவதை மெதுவாக்குவது குறைக்கின்றது.

மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் டோக்கியோவில் உள்ள Eisai என்ற மருந்து நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது, இது lecanemab மருந்தை உருவாக்க அமெரிக்க பயோடெக் நிறுவனமான Biogen உடன் இணைந்துள்ளது.

இது மருத்துவ உலகின் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகின்றது. இதனை கண்டுபிடித்த மருத்து மற்றும் விஞ்ஞானிகள் குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!