எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய பிரித்தானியர் -மனைவிக்காக கொண்டு வந்த அந்த அரிய பொருள்

Nila
1 year ago
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய பிரித்தானியர் -மனைவிக்காக கொண்டு வந்த அந்த அரிய பொருள்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய பிரித்தானியர் ஒருவர், அங்கிருந்து கொண்டு வந்த ஒரு பொருளை தன் மனைவியின் திருமண மோதிரத்தில் இணைத்துள்ளார்.

பிரித்தானியரான நிக்கோலஸ் (46), தனது வருங்கால மனைவியான நூருடைய (38) பிறந்த நாளன்று, அவருக்கு பரிசொன்றை அளித்தார். அது ஒரு நீலக்கல் பதித்த மோதிரம். அப்படியே தன் காதலை நிக்கோலஸ் வெளிப்படுத்த, காதலை நூர் ஏற்றுக்கொள்ள, அந்த மோதிரத்தை நூருக்கு அணிவித்தார் நிக்கோலஸ்.ஆனால், அந்த மோதிரம் ஒரு சாதாரண மோதிரம் அல்ல. அதன் பின்னால் மிகப்பெரிய கதை ஒன்று உள்ளது.

நிக்கோலஸுக்கு சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் என்னும் மரபியல் நோய் உள்ளது. அந்த நோயின் மத்தியிலும் உலகின் உயரமான சிகரங்களில் ஏறவேண்டும் என்பது அவரது விருப்பம்.அதன்படி, நிக்கோலஸ் 2014ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முடிவுசெய்தபோது, ஒரு பெரும் பனிப்பாறைச் சரிவு அவரது ஆசையை நிறைவேற்றமுடியாமல் தடுத்துவிட்டது.மீண்டும் அடுத்த ஆண்டு அவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சித்தபோது, ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் நேபாள நாட்டில் 9,000 பேர் உயிர்ழந்தார்கள்.பனிப்பாறைச் சரிவில் சிக்கிய நிக்கோலஸின் விலா எலும்புகள் உடைந்துவிட்டன. அதைவிட சோகம், உயிரிழந்தவர்களில் நிக்கோலஸின் நண்பரும் ஒருவர்.

2016ம் ஆண்டு மீண்டும் எவரெஸ்டில் ஏற முயன்ற நிக்கோலஸ், இம்முறை தான் நினைத்ததை சாதித்துவிட்டார். எவரெஸ்டின் மீது ஏறியதன் மூலம், தன்னைப்போலவே சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் பிரச்சினை உள்ளவர்களுக்காக 120,000 பவுண்டுகள் சேகரித்த நிக்கோலஸ் மனதில், வேறொரு நீண்ட நாள் ஆசையும் இருந்தது.

அதாவது, எவரெஸ்ட் சிகரத்தில் தான் கால் பதித்தபோது, அங்கிருந்து ஒரு ஃப்ளாஸ்கில் கொஞ்சம் பனிக்கட்டியை எடுத்துவந்தார் நிக்கோலஸ்.அவரது நீண்ட நாள் ஆசையின்படியே, அந்த பனிநீரை மோதிரம் ஒன்றிற்குள் வைத்து, அதன் மீது நீலக்கல் ஒன்றை பதித்து, அந்த அபூர்வ மோதிரத்தைத்தான் தனது மனைவிக்கு தன் காதலை வெளிப்படுத்தும் பரிசாகக் கொடுத்தார் நிக்கோலஸ்.

அந்த ஆசை நிறைவேறிவிட்டாலும், நிக்கோலஸுக்கு இன்னொரு ஆசையும் உண்டு. அது, ஏழு கண்டங்களிலும் உள்ள உயரமான சிகரங்களிலும் கால் பதிக்கவேண்டும் என்பதுதான். உண்மையில், தற்போது கிட்டத்தட்ட தனது ஆசைகள் அனைத்தையும் அவர் நிறைவேற்றிவிட்டார் என்றே கூறலாம். அண்டார்டிகாவில் உள்ள Mount Vinson சிகரத்தில் மட்டும் இன்னமும் அவர் ஏறவில்லை. இந்த மாதம் அதையும் முயற்சித்துவிடும் முடிவில் இருக்கிறார் நிக்கோலஸ்! 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!