எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அவதார் 2 வெளியாவதில் சிக்கல்

Nila
3 years ago
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அவதார் 2  வெளியாவதில் சிக்கல்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் படம் வெளியாகி கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கடந்துவிட்டன. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, எவர் கிரீன் வெற்றிப்படமாக மாறியது. தற்போது அதன் அடுத்த பாகத்தை இயக்கி முடித்துள்ளார் ஜேம்ஸ்.

அவதார்: தி வே ஆஃப் வாட்டர் என்ற அவதார் படத்தின் 2-ம் பாகத்தை, ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து ஜான் லாண்டாவ் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் 3டி-யில் 160 மொழிகளில் டிசம்பர் 16-ஆம் தேதி பிரம்மாண்டமாகத் திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இப்படத்தை தமிழ் டப்பிங்கில் வெளியிடும் விநியோக நிறுவனம், திரையரங்குகளிடம் 70 சதவீத தொகையை கேட்பதாக, திரையரங்கு உரிமையாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் இணை செயலாளர் ஸ்ரீதர், இவ்விவகாரம் தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க உள்ளதாக கூறினார். இதனால் அவதார்-2 திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4