உக்ரைன் போர் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள கருத்து

Keerthi
1 year ago
உக்ரைன் போர் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள கருத்து

ரஷ்யா ,உக்ரைன் போர் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

அங்கு அதிபர் ஜோ பைடனை சந்தித்த மேக்ரான், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். குறிப்பாக ரஷ்யா-உக்ரைன் போர் நிலவரமானது இரு நாடுகளுக்கும் பிராதன பிரச்னையாக உள்ளது. எனவே, ஜோ பைடன் - மேக்ரான் ஆலோசனையில் ரஷ்யா போர் தான் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சு வார்த்தைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த ஜோ பைடன் பேசுகையில், "இந்த போரை நிறுத்த ஒரே சரியான வழி, உக்ரைனில் இருந்து ரஷ்யா தனது படைகளை திரும்பப்பெறுவது தான். ஆனால், புதின் அதை செய்வதாக தெரியவில்லை. பிரான்ஸ் மற்றும் சக நேட்டோ நண்பர்களிடம் ஆலோசித்து வருகிறேன். 

அதன் அடிப்படையில், இந்த போரை நிறுத்த தேவையென்றால், புதினுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராகவுள்ளேன். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர புதின் நினைத்தால், புதினுடன் அமர்ந்து பேசி,அவர் மனதில் என்ன உள்ளது என்று அறிந்துகொள்ள தயாராக உள்ளேன். ஆனால், புதின் இதற்கு தயாராக உள்ளாரா என்று தெரியவில்லை.

உக்ரைனை எளிதில் வென்றுவிடலாம் என்று புதின் தப்புக்கணக்கு போட்டுள்ளார். ஆரம்பத்தில் அவர் போட்ட கணக்கு எல்லாம் தப்புக்கணக்காக மாறிவிட்டது. ரஷ்ய படையெடுப்பை எதிர்கொள்ள உக்ரைனுக்கு அமெரிக்காவும் பிரான்சும் எப்போதும் துணை நிற்கும்" என உறுதி அளித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் நாட்டின் மீது போர் அறிவித்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். 10 மாதங்கள் ஆகியும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த திடீர் படையெடுப்பு ஓய்ந்தபாடில்லை.

ஆரம்பத்தில் ரஷ்யா வெகு வேகமாக முன்னேறி உக்ரைனின் முன்னணி நகரங்களை கைப்பற்றியது. இருப்பினும் உக்ரைன் சரணடையாமல் நோட்டோ நாடுகளின் உதவியுடன் ரஷ்ய படைகளை எதிர்த்து போராடி ரஷ்யாவுக்கு கடும் சவால் தந்து வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!