இன்றைக்கான இராசி பலன்கள் 10-12-2022

#spiritual #Astrology
இன்றைக்கான இராசி பலன்கள் 10-12-2022

மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள் இன்றைய நாள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் பொறுமை அவசியம். துணையுடன் மகிழ்ச்சியாக சூழல் நிலவுவதற்கு நட்போடு பழகுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். அதனால் செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் சற்று அதிக கவனம் தேவை.

ரஷிபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான நாளாக அமையும். பணியிடத்தில் உங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேலதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் துணையைப் புரிந்துகொண்டு அவரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். இதனால் உறவில் நல்லிணக்கம் ஏற்படும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

 இன்றைய நாள் சற்று சவாலான நாளாக அமையும். அலுவலகத்தில் அதிக பணிகள் காணப்படுவதால். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. துணையுடன் பேசும்பொழுது பொறுமையுடன் பேசவேண்டும் வேண்டும். செலவுகள் அதிகமாக காணப்படும். உங்களிடம் பணம் இருந்தாலும் திருப்திகரமான நிலை இருக்காது.

கடகம்

 கடகம் ராசிக்காரர்களுக்கு  இன்றைய நாள் உங்களுக்கு பொறுமையாக செயல்படவேண்டிய நாளாக இருக்கும். அலுவலகத்தில் அதிக பணிகள் காணப்படுவதால் சற்று கவனமுடன் செயல்படுத்து நல்லது. உங்கள் துணையுடன் பேசும்பொழுது வார்த்தையை விடாமல் இருப்பது நல்லது. நாளை பணவரவு குறைந்தே காணப்படும்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிக சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். பணியின் நிமித்தமாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். துணையுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. நிதிநிலைமை மிகவும் குறைந்தே காணப்படும். கால்கள் மற்றும் தோள்களில் வலிகள் காணப்படும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்றைய நாள் நல்ல பலன்கள்தான் காணப்படும். உங்கள் பணிகளை குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பீர்கள். அதனால் உங்களை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். நாளை நாள் பணவரவு மிகுதியாக காணப்படும். 

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்றைய நாள் சாதகமான நாளாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் உங்களின் கனவுகள் நனவாகும் நாளாக நாளைய நாள் அமைகிறது. உங்களிடம் காணப்படும் உற்சாகம் காரணமாக நீங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் அவரை நன்கு புரிந்து கொள்ள முடியும். இதனால் மகிழ்ச்சி ஏற்படும். பணவரவு நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் காணப்படும்  

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்கள் இன்றைய நாள் உங்களுக்கு நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைகிறது. உங்கள் பணிக்கு உங்கள் மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நீங்கள் எண்ணுவீர்கள்.இதனால் உங்கள் தன்னம்பிக்கை குறையும்.குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. உங்கள் துணையிடம் உங்களின் பதட்டம் மற்றும் ஏமாற்றத்தை பகிர்ந்துகொள்வீர்கள். பண புழக்கம் சிறப்பாக இருக்காது. 

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்றைய நாள் உங்களுக்கு பொறுமையுடன் செயல்பட்டு வெற்றி பெறவேண்டிய நாளாக அமைகிறது. பணியில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் பணிகளைக் கையாளும்பொழுது கவனம் தேவை.எனவே உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே வாய் சண்டை நடக்கலாம். பணவரவு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இருக்காது.

மகரம்

மகரம் ராசிக்காரர்கள் இன்றைய நாள் முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாளாக அமைகிறது.உங்களின் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அதனால் உங்களை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். துணையுட நட்பான அணுகுமுறையுடன் பழகுவது நல்லது. பண வளர்ச்சி உங்களுக்கு போதுமான அளவிற்கு இருக்கும்.

கும்பம்

ராசிக்காரர்கள் இன்றைய நாள் நீங்கள் தன்னம்பிக்கையுடான் செயல்படுவீர்கள். ஆகவே உங்கள் பணிகளை சிறப்பிக்க செய்து முடிப்பீர்கள். அதனால் உங்களை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். துணையுடன் அமைதியுடன் பேசி அவருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களிடம் உள்ள பணம் உங்களுக்கு போதுமானதாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள்  இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமைய திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உங்கள் போக்கில் அனுசரனை கடைபிடிப்பதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியான தருணங்களைக் காணலாம். உங்களின் துணையுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. நிதி நிலைமாய் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!