சுவிஸ் மக்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் பற்றிய தகவலை வெளியிட்டுள்ள நிறுவனம்
Prasu
2 years ago

சுவிட்சர்லாந்து மக்களினால் கூகுளில் அதிகளவு தேடப்பட்ட வார்த்தைகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
உக்ரைன்-ரஸ்ய போர் மற்றும் கட்டார் உலகக் கிண்ண போட்டித் தொடர் என்பன பற்றியே அதிகளவில் தேடப்பட்டுள்ளது.
அதிகளவில் தேடப்பட்ட வார்த்தைகளாக “Ukraine”, “WM 2022” மற்றும் “Wordle” ஆகிய வார்த்தைகள் அதிகளவில் தேடப்பட்டுள்ளன. யூரோ கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் மற்றும் கோவிட் என்பனவே வருட ஆரம்பத்தில் கூடுதலாக தேடப்பட்டுள்ளது.
எனினும் உக்ரைன் போர் ஆரம்பிக்கப்பட்டது முதல் போர் தொடர்பிலான தேடுதல்கள் அதிகரித்துள்ளன. ஒமிக்ரோன் எவ்வளவு ஆபத்தானது?, ரஸ்யா ஏன் உக்ரைன் மீது தாக்குதல் நடாத்துகின்றது போன்ற கேள்விகள் அதிகளவில் எழுப்பப்பட்டுள்ளன.



