சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்தில் வாகன ஓட்டுனர்கள் எதிர்நோக்கும் வித்தியாசமான தாக்குதல்கள்
சுவிஸ் மாகாணம் ஒன்றில் வாகன ஓட்டிகள் வித்தியாசமான தாக்குதல் ஒன்றை எதிர்கொண்டு வருவதாக புகாரளித்துள்ளார்கள்.
பறந்துவரும் பூசணிக்காய்கள்
சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்தின் சாலையில் வாகனத்தில் பயணிப்போர் மீது மர்ம நபர்கள் பூசணிக்காய்களை வீசிவருகிறார்கள். வாகனம் ஓட்டிக்கொண்டு செல்லும்போது திடீரென பறந்துவரும் பூசணிக்காய்களால் விபத்துக்கள் நேரிட்டுவருகின்றன.
பெண்ணொருவர் மீது பூசணிக்காய் வீசப்பட்டதில் அவர் கீழே விழ, அவரது இருசக்கர வாகனம் சேதமடைந்தது. அவரைப்போலவே பலரும் தாக்கப்பட்டதாக புகாரளித்துவருகிறார்கள்.
இரவு நேரத்தில் தாக்குதல்
இதுவரை புகாரளித்துள்ள அனைவருமே Baden நகரில்தான் தாக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன், இரவில் தாங்கள் தாக்கப்பட்டதாகவே அவர்கள் அனைவரும் புகாரளித்துள்ளார்கள்.
ஒரு குறிப்பிட்ட பெண், 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்த கார் ஒன்றிலிருந்து தன் மீது பூசணிக்காய் ஒன்று வீடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அந்த பூசணிக்காய் அவர் மீது படாமல் கீழே விழவே, அந்த கார் மீண்டும் திரும்பிவந்ததாம். அதிலிருந்தவர்கள் மீண்டும் பூசணிக்காய் ஒன்றை அவரை நோக்கி வீசினார்களாம்.
அவர் அதிர்ஷ்டவசமாக தப்பியது போல மற்ற சிலர் தப்பவில்லை. இந்த பூசணிக்காய் தாகுதல் தொடர்ந்துவரும் நிலையில், பொலிசார் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.