ரஷ்யா மற்றும் ஈரான் மீது அமெரிக்கா பகிரங்கமான குற்றச்சாட்டு
Kanimoli
2 years ago

ரஷ்யா மற்றும் ஈரான் மீது அமெரிக்கா பகிரங்கமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
ரஷ்யா மற்றும் ஈரானுக்கு இடையில் மிக நெருங்கிய இராணுவ ஒத்துழைப்புக்கள் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையகத்தின் செய்தி தொடர்பாளர் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் சேர்ந்து ஆளில்லா விமானங்களைத் தயாரிக்கும் முயற்சிகள் குறித்து அமெரிக்கா அவதானம் செலுத்தி வருவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையகத்தின் செய்தி தொடர்பாளர் ஜோன் கிர்பி குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, உக்ரைன் மற்றும் ரஷ்யா மோதல்களுக்கு, ஈரான் ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



