சிவபெருமானை கோவில் சென்று இப்படி வழிபட்டவர்கள் தோற்றது கிடையாது.

#spiritual #God #worship
சிவபெருமானை கோவில் சென்று இப்படி வழிபட்டவர்கள் தோற்றது கிடையாது.

சிவன் கோவிலுக்கு செல்வதனால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன, சிவன் கோவிலுக்கு செல்லும் போது நாம் என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றிய சின்ன சின்ன ஆன்மீக ரீதியான குறிப்புகளை நாம் இக் கட்டுரையில் பகிர்கிறோம்.


வீட்டிலிருந்து சிவன் கோவிலுக்கு கிளம்பும்போது நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டு மனதிற்குள் சிவ சிவ, ஓம் நமசிவாய, சிவாய நம, ஓம் இப்படி ஏதாவது ஒரு சிவ மந்திரத்தை உச்சரித்துக் கொள்ளல் நன்று.

பின்னர் சிவன் கோவிலுக்குள் நுழைந்த உடனே நந்தி தேவரிடம் ஒரு அனுமதியை வாங்கிக் கொண்டு, சிவனை தரிசனம் செய்ய செல்லுங்கள்.

நீங்கள் மூலவரை தரிசனம் செய்து விட்டு பிரகாரத்தை வலம் வர வேண்டும். பிரகாரத்தை சுற்றி இருக்கும் மற்ற தெய்வங்களிடம் பிரார்த்தனை வைக்க வேண்டும். இறுதியாக சிவன் கோவிலில் ஏதாவது ஒரு இடத்தில் அரை மணி நேரம் கண்களை மூடி அமர்ந்து தியான நிலையில் இருந்தால் வேண்டியது நிறைவேற இடமுண்டு.

அப்படி இல்லை என்றால் சிவனுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு பாடல்களை மனதிற்குள்ளே அல்லது வாய் விட்டோ பாடி தரிசனத்தை நிறைவு செய்யுங்கள்.

இதை நீங்கள் தவறாது கடைப்பிடித்தால் உடம்பை பிடித்த எதிர்மறை ஆற்றல் விலகி உடம்பில் ஒரு புத்துணர்ச்சி பிறக்கும். உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி  கிடைக்கும்.

இவ்வளவுதாங்க முடிந்தவர்கள் இதை முயற்சி செய்து பாருங்கள். கோவிலுக்கு சென்றால் மனதை ஒருநிலைப்படுத்தி இறைவழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, அங்கு சென்று தெரிந்தவர்களிடம் கதை பேசிக்கொண்டு இருக்கக் கூடாது.

சிவன் மீது  நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். ஓம் நம்ச்சிவாய....