மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர்களே! கன்னி இராசியினர்!!
பொதுப்பலன்கள்...
இது ஒரு பெண் ராசி. இது ஒரு நில ராசியும்கூட. இதன் அதிபதி புதன். புதனுக்கு இது உச்ச வீடாகவும் மற்றும் மூலத் திரிகோண வீடாகவும் ஆகிறது.
இந்த ராசிக்கு ஒரு பெண்ணின் உருவத்தைக் கொடுத்தாலும், இந்த ராசிக்கு உரிய சின்னம் F. புதனுக்கு சுக்கிரன் நண்பனாக இருந்தாலும், இந்த ராசியில்தான் சுக்கிரன் நீச்சமாகிறார்.
ஒரு ஜாதகத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்கள் இந்த ராசியில் இருந்தால், அவர்கள் எதிரியின் வீட்டில் இருப்பதாகவே கருதப்படுவார்கள்.
சனி இருப்பின், அது நண்பன் வீட்டில் இருப்பதாகக் கருதப்படும். இது உடலில் உள்ள நரம்பு மண்டலத்தையும், உள் உறுப்புகளில் குடலையும் குறிக்கிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள், பணம் சேமிக்கும் குணம் உள்ளவர்களாக இருப்பார்கள். பிறருக்குத் தெரியாமல் சேமிக்கும் குணம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
புதன் மட்டும்தான் தன்னுடைய ராசிகளில் ஒன்றான கன்னியிலேயே உச்சம் அடைகிறார். அதனால் உங்களுடைய திறமையை, தகுதியை பிறர் அங்கீகரிக்கத் தவறினால், உங்களுக்கு நீங்கள் மகுடம் சூட்டிக் கொள்வீர்கள்.
உங்களைச் சுற்றி நடக்கும், வெளிச்சத்துக்கு வராத அவலங்களைத் தட்டிக் கேட்பீர்கள். பிறரிடம் வேலை செய்தாலும், பெரும்பாலும் சொந்தத் தொழில் செய்யவே விரும்புவீர்கள்.
பணம் குறைவாகக் கிடைத்தாலும் மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்யவே விரும்புவீர்கள். எப்படிப் பார்த்தாலும் நீங்கள் தொடர்ந்து தொழிலாளியாகவே இருக்கமாட்டீர்கள்.
உங்களின் 2-ம் இடமான வாக்கு ஸ்தானத்துக்கு சுக்கிரன் அதிபதி என்பதால், உற்சாகமாகப் பேசுவீர்கள். உங்களுடைய ஆறுதலான சில வார்த்தைகள் மற்றவர்களின் வாழ்க்கை யில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும்.
11-ம் இடமான லாப ஸ்தானத்துக்கு சந்திரன் அதிபதியாக வருந்தால், உங்களின் அறிவுத் திறமையைப் பயன் படுத்தி அதிக லாபம் சம்பாதிப்பீர்கள். உடலுழைப்பு என்பது குறைவாகவே இருக்கும்.
கன்னி ராசி என்றாலே பொதுவாக சாதாரணமாக இருப்பார்கள். கோபம் வந்தால்கூட வந்த உடனே மறைந்துவிடும். ஆனால், அதனால் சில நட்புகளை இழக்க நேரிடும். உங்களை யாரேனும் அவமானப்படுத்தினால் ஆவேசத்துடன் எதிர்ப்பீர்கள்.
நீங்கள் உழைப்பதற்கு தயங்காதவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிலையாக இருந்து உங்களது செயல்களை முடிப்பீர்கள் . 12 ராசிக்காரர்களில் சேமிக்கும் பழக்கம் உடையவர்கள் நீங்களாகத்தான் இருப்பீர்கள் .