NPP அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்த ஆசியரியர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர் - நாமல் விமர்சனம்!
#SriLanka
#Sri Lanka Teachers
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
NPP அரசாங்கம் எதிர்கட்சியாக இருந்த காலத்தில் அவர்களுக்கு ஆதரவாக நின்ற இளைஞர்களையும் ஆசிரியர்களையும் அரசாங்கம் காட்டிக்கொடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
கம்புருபிட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதுள்ள ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறைகள் குறித்த முன் ஒப்பந்தங்கள் இருந்தபோதிலும், தகுதியான நபர்களுக்கு அரசியல் காரணங்களுக்காக நியமனங்கள் மறுக்கப்படுகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த ஆசிரியர்களில் பலர் தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளதாகவும், அவர்களின் ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.