பதவி விலக கோரி பங்களாதேஷ் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டம்

#Bangladesh #Protest
Prasu
2 years ago
பதவி விலக கோரி பங்களாதேஷ் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டம்

வங்காளதேசத்தின் பிரதமராக பதவி வகித்து வருபவர் ஷேக் ஹசீனா. இந்நிலையில், கோலாபாக் மைதானத்தில் எதிர்க்கட்சியான வங்காளதேசம் தேசிய கட்சியினர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

ஷேக் ஹசீனா வாக்குகளை திருடிவிட்டதாக குற்றம் சாட்டி கோஷமிட்டனர். மேலும் அவர்கள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும், விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். 

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 7 எம்பிக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தனர். 

பாராளுமன்றத்தை கலைத்து, நடுநிலையான காபந்து அரசாங்கம் அமைக்க சுதந்திரமான, நம்பகத்தன்மையுடன் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எங்களது முக்கிய கோரிக்கை என எதிர்க்கட்சியின் தெரிவித்தனர். 

எதிர்க்கட்சியினர் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைநகர் டாக்காவில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!