சீக்கிய குருத்துவாராவுக்கு சென்று தரையில் அமர்ந்த மன்னர் சார்லஸ் - வியப்பில் இங்கிலாந்து மக்கள்

Prasu
1 year ago
சீக்கிய குருத்துவாராவுக்கு சென்று தரையில் அமர்ந்த மன்னர் சார்லஸ் - வியப்பில் இங்கிலாந்து மக்கள்

இங்கிலாந்து நாட்டில் ஏராளமான சீக்கியர்கள் வசித்து வருகிறார்கள். இங்கிலாந்து வாழ் சீக்கியர்கள், லண்டனை அடுத்த லூடனில் புதிதாக சீக்கிய குருத்துவாரா ஒன்றை கட்டினர். 

இதன் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. இதில் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் மற்றும் சீக்கியர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவுக்கு இங்கிலாந்தின்புதிய மன்னர் சார்லசும் அழைக்கப்பட்டிருந்தார். 

சீக்கியர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்ட மன்னர் சார்லஸ், புதிய குருத்துவாராவுக்கு சென்றார். அங்கு நடந்த பிரார்த்தனையிலும் பங்கேற்றார். 

அப்போது குருத்துவாராவில் சீக்கியர்கள் கடைபிடிக்கும் மரபுபடி மன்னர் சார்லசும் தரையில் அமர்ந்தார். எல்லோரையும் போல அவரும் தரையில் அமர்ந்தபடி பிரார்த்தனையில் பங்கேற்றார். 

இங்கிலாந்து மன்னர் தரையில் அமர்ந்து பிரார்த்தனை செய்தது இங்கிலாந்து மக்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

இது தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, மறைந்த ராணி, சீக்கியர்கள் மீதும், அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். 

ஆனால் ராஜ குடும்பத்தை சேர்ந்த எவரும் தரையில் அமர்ந்ததில்லை. இப்போது மன்னர் சார்லஸ், குருத்துவாரா பிரார்த்தனை கூடத்தில் தரையில் அமர்ந்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இது வரலாற்று சிறப்பு மிக்கது என்றார். இங்கிலாந்து மன்னர் சார்லஸ், லூடன் குருத்துவாராவில் சுமார் ஒரு மணி நேரம் இருந்தார். 

பின்னர் அங்கிருந்த இசைக்கருவிகளையும் பார்வையிட்டார். சீக்கிய குழந்தைகளுடனும் அவர் உரையாடினார். குழந்தைகளிடம் இசை கருவிகளை இசைக்க கேட்டு அதனை ரசிக்கவும் செய்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!