பிரான்ஸ் நாட்டில் காரின் மீது துப்பாக்கி சூடு நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய வேட்டைக்காரர்கள்

Prasu
2 years ago
பிரான்ஸ் நாட்டில் காரின் மீது துப்பாக்கி சூடு நடத்தி பரபரப்பை  ஏற்படுத்திய வேட்டைக்காரர்கள்

பிரான்சில் உள்ள Warluis என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் ஏராளமானோர் பயணித்தனர்.அப்போது திடீரென வேட்டைக்காரர்கள் காரின் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. 

இதுகுறித்து Warluis பகுதியின் மேயரான Dominique Mored  கூறியதாவது, “பல வேட்டைக்காரர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.

அவர்கள் சாலையின் செல்லும் கார்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் வேட்டைக்காரர்கள் கூட்டமைப்பின் இயக்குனரான marc Morgan என்பவரும் விதிகளை மதிக்காமல் இப்படி நடந்து கொண்டால், அதில்  சமரசம் செய்வதற்கு ஒன்றுமில்லை. 

மேலும் ஒருவர் தனது காரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது திடீரென துப்பாக்கியால் சுடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

இதுபோன்று இந்த மாதத்தில் 2  முறை நடந்துள்ளது என கூறியுள்ளார். இது அந்நாட்டில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!