உக்ரைன் போர், ரஷ்ய -நேட்டோ போராக உருவெடுக்கும் அபாயம் - நேட்டோ பொதுச்செயலாளர்

Prasu
1 year ago
உக்ரைன் போர், ரஷ்ய -நேட்டோ போராக உருவெடுக்கும் அபாயம் - நேட்டோ பொதுச்செயலாளர்

அமெரிக்கா, கனடா மற்றும் 28 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ. உலகின் மிகவும் வலிமையான ராணுவ கூட்டமைப்பாக அறியப்படும் இந்த அமைப்பில் இணைவதற்கு கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. நேட்டோவும் இதற்கு சம்மதம் தெரிவித்தது.

இந்த சூழலில் உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த அதன் அண்டை நாடான ரஷியா உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இன்னும் சில தினங்களில் இந்த போர் 11-வது மாதத்தை எட்டவுள்ளது.

ரஷியா குற்றச்சாட்டு

இந்த போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் நேரடியாக பங்கேற்கவில்லை என்றாலும் உக்ரைனுக்கு தேவையான ராணுவ மற்றும் நிதியுதவிகளை வழங்கி பக்கபலமாக இருந்து வருகின்றன. ஆனால் ரஷியாவோ உக்ரைன் போரில் அமெரிக்காவும் பிற நேட்டோ நாடுகளும் நேரடியாகப் பங்கேற்பதாக குற்றம் சாட்டி வருகிறது.

ரஷியாவுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்புவது, உக்ரைன் வீரா்களுக்கு தங்கள் நாடுகளில் போா்ப் பயிற்சியளிப்பது, ரஷிய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக உக்ரைன் ராணுவத்துக்கு உளவுத் தகவல்கள் மற்றும் ஆலோசனைகளை அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் போரில் மேற்கத்திய நாடுகள் நேரடியாக பங்கேற்பதாக ரஷியா கூறுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!