சிங்கப்பூர், டென்மார்க் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கான வெளியான முக்கிய தகவல்

Prasu
1 year ago
சிங்கப்பூர், டென்மார்க் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கான வெளியான முக்கிய தகவல்

பயணம் மேற்கொள்ள மிகப் பாதுகாப்பான நாடுகளின் தரவரிசையில் ஜெர்மனியும் இணைந்துள்ளது.

இந்த பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ள  நிலையில் ஜெர்மனி 10வது இடத்தை பிடித்துள்ளது.

உலகில் அதிகம் பயணம் மேற்கொள்ளப்படும் 50 நாடுகளின் அடிப்படையில் பயணப் பாதுகாப்புக் குறியீட்டை உருவாக்கியதாக The Swiftest எனும் அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவிததுள்ளது.

கொலைச் சம்பவங்கள் விகிதம் சாலை விபத்துகளின் மரண விகிதம், சுகாதாரம், பேரிடர் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளிட்ட 7 அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.

உலகச் சுகாதார நிறுவனம், ஐக்கிய நாட்டு நிறுவனம், உலக வங்கி ஆகியவற்றின் தகவல் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பயணம் மேற்கொள்வதற்கு ஆகப் பாதுகாப்பான நாடுகள்

சிங்கப்பூர், டென்மார்க், நெதர்லந்து, சுவிட்ஸர்லந்து, இஸ்ரேல், சுவீடன், ஆஸ்திரியா, அயர்லந்து, இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் இடம் பிடித்துள்ளது.

கொலைச் சம்பவங்கள், சாலை விபத்து மரண விகிதம், இயற்கை பேரிடர் ஏற்படுவதற்கான அபாயம் ஆகியவை குறைவாக இருப்பதால் சிங்கப்பூர் முதலிடம் பிடித்ததாக The Swiftest தெரிவித்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!