பிரித்தானியாவில் பனிக்கட்டி ஏரிக்குள் இழுத்துச் செல்லப்பட்ட பலர் ஆபத்தான நிலையில் -தேடுதல் நடவடிக்கை தீவிரம்

Nila
1 year ago
பிரித்தானியாவில் பனிக்கட்டி ஏரிக்குள் இழுத்துச் செல்லப்பட்ட  பலர் ஆபத்தான நிலையில் -தேடுதல் நடவடிக்கை தீவிரம்

பர்மிங்காம் அருகே உள்ள ஒரு ஏரியில் இழுத்துச் செல்லப்பட்ட பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிசார் கூறியதை அடுத்து, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாப்ஸ் மில் பூங்காவில் மக்கள் பனியில் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக  வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் தீயணைப்பு சேவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர்கள்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. 

சிறப்புக் குழுக்கள் மற்றும் உபகரணங்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை 14:30 GMTக்குப் பிறகு சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டதாக தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.

அவசரகால சேவைகள் ஏரியில் பணியை மேற்கொண்டுள்ளதால் அந்த குதியில் பொது மக்கள் குவிந்துள்ளனர்.

ஒரு ட்ரோன் தண்ணீருக்கு மேல் பறந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர சேவை பல மணிநேரங்களுக்கு அங்கேயே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாப்ஸ் மில் பார்க் என்பது ஒரு ஏரி, ஆறு, காட்டுப்பூ புல்வெளிகள் மற்றும் வனப்பகுதிகளைக் கொண்ட ஒரு உள்ளூர் இயற்கை இருப்பு ஆகும்.

அவசர சேவைகள் அழைக்கப்பட்ட நேரத்தில் அப்பகுதியில் 1C (34F) வெப்பநிலை பதிவாகியுள்ளது. இரவில் அவை -3C ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை,  பனிக்கட்டிகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது

.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!