பிரித்தானியாவில் பொது போக்குவரத்து பயன்படுத்துவதில் நெருக்கடி!
Nila
2 years ago

பிரித்தானியாவில் பொது போக்குவரத்து பயன்படுத்துவதில் நெருக்கடி நிலைமை ஏற்படலாம் என குறிப்பிடப்படுகின்றது.
கிறிஸ்துமஸ் காலத்தில் பொது போக்குவரத்து ஊழியர்கள் மேலதிக நாட்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரயில்- கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் தேசிய தொழிற்சங்கம் இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பையடுத்து பிரித்தானிய மக்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகுவார்கள் எனவும் கிறிஸ்துமஸ் தினத்தன்று பயணங்களை திட்டமிடுபவர்கள் பயணங்களை தவிர்க்கும் நிலைமை ஏற்படலாம் எனவும் கூறப்படுகின்றது.
ஊதிய பிரச்சினையில் ஈடுபட்டுள்ள சுமார் பாதி தொழிலாளர்களை உள்ளடக்கிய நெட்வொர்க் ரயிலின் ஊழியர்கள், கிறிஸ்மஸ் அன்று மாலை 6 மணி முதல் டிசம்பர் 27 வரை வெளிநடப்பு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



