பிரித்தானியா மற்றும் ஜேர்மனியின் அரசியல் பிரமுகர்கள் மற்றும் உள்நாட்டு உளவு நிறுவனங்களுக்கு எதிராக ஈரான் பொருளாதார தடை

பிரித்தானியா மற்றும் ஜேர்மனியின் அரசியல் பிரமுகர்கள் மற்றும் உள்நாட்டு உளவு நிறுவனங்களுக்கு எதிராக ஈரான் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
வாராந்திர செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஈரான் இஸ்லாமிய குடியரசின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டதற்காக ஐரோப்பியர்கள் மற்றும் பிரிட்டிஷ் மீது குற்றம் சாட்டியதுடன், பொருளாதாரத் தடைகள் இன்று நடைமுறைக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
22 வயதான மஹ்சா அமினியின் மரணத்தை தொடர்ந்து நுமார் மூன்று மாத எதிர்ப்புகளுக்கு ஈரானின் பதிலைப் பற்றி பிரித்தானியாவும், ஜேர்மனியும் குறிப்பாகக் குரல் கொடுத்தன.
குர்திஷ்-ஈரானியப் பெண், ஈரானின் பெண்களுக்கான ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சாட்டி, அறநெறிப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட பின்னர் காவலில் இருந்தபோது இறந்தார்.
பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்திற்கு முன்னதாக 32 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது ஈரான் தனது பொருளாதாரத் தடைகளை விதித்தது.
ஈரானின் பொருளாதாரத் தடைகள் பட்டியலில் உள்நாட்டு உளவு நிறுவனமான MI5 இன் டைரக்டர் ஜெனரல் கென் மெக்கலம் மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர் அட்மிரல் சர் டோனி ராடாகின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மற்றவற்றில் பிரித்தானிய பாராளுமன்றத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் உலகளாவிய மாற்றத்திற்கான டோனி பிளேர் நிறுவனம் ஆகியவை அடங்கும்.
பல ஜெர்மன் அரசியல் பிரமுகர்கள் மற்றும் நிறுவனங்களும் இந்த தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் Annegret Kramp-Karrenbauer, கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் Claudia Roth, கலாச்சாரம் மற்றும் ஊடகங்களுக்கான மத்திய அரசாங்க ஆணையர் ஆகியோர் அடங்குவர்.



