சுவிட்சர்லாந்தில் அதிகரித்துள்ள நோய்த் தொற்று: மத்திய சுகாதார திணைக்களம் வெளியிட்ட தகவல்
சுவிட்சர்லாந்தில் சளி காய்ச்சல் பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில் குறித்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக மத்திய சுகாதார திணைக்களத்தின் பேச்சாளர் சிமொன்ட் மெங் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் சளி காய்ச்சல் நோய் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்வதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
எதிர்வரும் நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் சளி காய்ச்சல் நோயாளர்களை எதிர்பார்க்க முடியும் எனவும் சளி காய்ச்சல் அலை பரவும் அபாயம் காணப்படுவதாகவும் சூரிச் மருத்துவ பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் ஹுல்ரிச் குன்டார்ட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா பெருந்தொற்று வைரசினால் பாதிக்கப்பட்ட தொற்றாளர் எண்ணிக்கை ஸ்திரமான ஒரு நிலையை அடைந்துள்ள பின்னணியில் சளி காய்ச்சல் நோயாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.