சுவிட்சர்லாந்தில் முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட தூதரகம்!
சுவிட்சர்லாந்தில் பேர்ன் நகரில் அவுஸ்திரேலியாவிற்கான தூதரகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்திற்கும் அவவுஸ்த்திரேலியாவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் ஓர் நடவடிக்கையாக இந்த தூதரகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்பு பலப்படுத்தப்படுத்தும் நோக்கில் இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு தூதுரகம் மீளத் திறக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் சுமார் 60 ஆண்டுகள் உறவு காணப்படுவதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வொங் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 30 ஆண்டுகளின் பின்னர் அவுஸ்திரேலியாவின் தூதரகம் சுவிட்சர்லாந்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்திற்கான அவுஸ்திரேலிய தூதரகம் கடந்த 1992ம் ஆண்டு மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.