கதாநாயகியாக அறிமுகமாகும் சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமி

Nila
3 years ago
கதாநாயகியாக அறிமுகமாகும்  சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமி

இந்திய தொலைகாட்சி ஒன்றின் மூலமாக தமிழ் திரையுலகில் பாடகர்களாக அறிமுகமானவர்கள் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதிகள் .

"சின்ன மச்சான்" எனும் பாடல் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார்கள். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ராஜலட்சுமி பாடிய ‘வாயா சாமி’ எனும் அனைவரையும் கவர்ந்தது.

செந்தில் கணேஷ் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து இருளி எனும் படத்தில் நடித்து வருகின்றனர். ராஜலட்சுமி ஒரு திரைப்படம் ஒன்றில் நாயகியாக நடிக்கிறார். இயக்குனர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் ராஜலட்சுமி தற்போது‘Licence’ எனும் படத்தில் நடிக்கிறார். 

இத்திரைப்படத்தில் நடிகர் ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிள்ள நிலையில் ,இப்படத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. இதன் போது பேசிய செந்தில் ராஜலட்சுமி , "இயக்குநர் கணபதி பாலமுருகன் சார், சமூகத்துக்கான ஒரு வலிமையான கதையை கொண்டு வந்துள்ளார். அதற்கு என்னை தேர்வு செய்ததற்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. 

இந்த படத்தில் என் பெயர் பாரதி. தேடிச்சோறு நிதந்தின்று எனும் பாரதியிடன் பாடலுக்கு இணங்க ஒவ்வொரு பெண்ணுக்கும் இன்னொரு சக பெண்ணுக்கு அநீதி நடக்கும்போது, அதுவும் அப்பெண் ஆசிரியராக இருக்கும்போது ஏதாவது செய்யவேண்டும் என தோன்றும். அதை சுற்றியே இந்த கதை" என கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4