எண் 4க்குரியவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்...
என் கடமை பணி செய்து கிடப்பதே என்பது போல பிரதிபலன் எதிர்பார்க்காமல் காரியங்களை செய்யும் குணமுடைய நான்காம் எண் அன்பர்கள்
நான்காம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே சிறப்பு வாய்ந்ததாகவே இருக்கும். நான்கு திசைகள், நான்கு வேதங்கள், நான்கு உபாயங்கள் என நான்காம் எண்ணுக்கு தனித்தன்மைகளும் உண்டு.
4,13,22, 31 ம் தேதிகளில் பிறந்தவர்கள் நான்காம் எண்ணுக்குரியவர்களாகிறார்கள். நான்காம் எண்ணின் கிரகம் ராகுவாகும். நான்காம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் D,M,T ஆகியவை. ராகு ஒரு சாயாகிரகமாகும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும்.
குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.
நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் அதிக பிடிவாத குணம் இருக்கும்.
அடக்கமாகவோ, விட்டுக் கொடுக்கும் பண்பாகவோ பேசத் தெரியாது. எப்பொழுதும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசுவார்கள்.
அழுத்தம் திருத்தமாகவும் திட்ட வட்டமாகவும் இவர்களின் பேச்சு அமையும். பிறருடைய அந்தஸ்தையோ, வளத்தையோ செல்வத்தையோ, பின்னால் இருக்கும் பலத்தையே பற்றி சற்றும் தயக்கம் காட்டாமல் மனதில் பட்டதை தைரியமாக, வெளிப்படையாக கூறக்கூடிய இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.
எல்லா இடங்களிலும் தங்கள் கருத்துக்களையே நிலை நிறுத்த முயற்சிப்பார்களே தவிர பிறருடைய கருத்தை செவி கொடுத்தும் கேட்க மாட்டார்கள். சண்டை போடுவது போல எப்பொழுதும் குரல் உச்ச ஸ்தானியில் ஒலிக்கும்.
எவ்வளவுதான் நல்ல பயன்கள் இருந்தாலும் பிறர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மனதில் பட்டதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒளிவு மறைவற்ற இவர்களின் அதிகாரமான பேச்சால் பல இன்னல்கள் சந்திக்க நேரிடும்.
இவர்களை புரிந்து கொள்பவர்களால் மட்டுமே இவர்களை அனுசரித்துச் செல்ல முடியும்.
இந்த உலகத்தில் தனக்கு தெரியாத விஷயங்கள் இல்லை என்ற ஆணவம் அதிகம் இருக்கும்.
புகழிலோ, பொருளிலோ அவ்வளவு ஆசை இருக்காது. எல்லோரும் தன் கருத்துக்களை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள்.
பொதுவாகவே இவர்கள் எதிலும் சட்டென உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். பொது நல காரியங்களுக்காக தம் உயிரையும் தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள்.
காதல் விவகாரங்களில் ஈடுபடுபவதும் உண்டு. அதில் முழு வெற்றி கிடைக்கும் என்று கூறி விட முடியாது. எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் ஒரு தீவிரவாதியாக செயல்படுவார்கள்.
திடீர் அதிர்ஷ்டங்களைக் காட்டிலும் உழைத்து முன்னேறுவதிலேயே அதிக விருப்பம் கொண்டவர்கள். சிலர் நடுத்தர வயதுக்கு மேல் ஞானிகள், துறவிகள் போல மாறி விடுவதும் உண்டு. எந்தக் காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை ஆராயந்த பிறகே முடிவெடிப்பார்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு
அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, வெளிர்பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4
பரிகாரம்: அம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்