வடகொரியாவுக்கு உணவு விற்ற சிங்கப்பூர் தொழிலதிபருக்கு சிறைத்தண்டனை

வடகொரியாவுக்கு உணவு விற்பனை செய்த தொழிலதிபரை சிங்கப்பூர் சிறையில் அடைத்துள்ளது.
குறித்த நபர் ஒரு மில்லியன் சிங்கப்பூர் டொலர் பெறுமதியான உணவு மற்றும் பானங்களை வடகொரியாவிற்கு விற்பனை செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வழியில் விற்கப்படும் உணவு மற்றும் பானங்களில் ஸ்ட்ராபெரி சுவை கொண்ட திரவ பால், காபி, ஒயின், விஸ்கி மற்றும் வாசனை திரவியங்கள் உள்ளன.
வடகொரியாவின் அணுசக்தி நடவடிக்கைகளால் சிங்கப்பூர் 2017ஆம் ஆண்டு வடகொரியாவுடனான வர்த்தக ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் குறித்த நபர் சிங்கப்பூரில் உள்ள பிரபல நிறுவனங்கள் ஊடாக வடகொரியாவிற்கு உணவு மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவருக்கு 05 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரில் இருந்து வட கொரியாவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்பவருக்கு அதிகபட்ச அபராதம் 100,000 சிங்கப்பூர் டொலர்கள் அல்லது ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பை விட 03 மடங்கு அதிகம்.
மேலும், அந்தக் குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு 02 வருட சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



