பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள்.... பாகம் - 02
#spiritual
#God
#Pillaiyar
Mugunthan Mugunthan
1 year ago
- விநாயகர் தனது ஐந்து கரங்களை கொண்டு அதாவது கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்திய கை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கை மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கை அருளல் தொழிலையும் செய்கின்றன.
- விநாயர் ஏன் பிள்ளையார் என்ற பெயர் கொண்டு விளங்குகிறார் தெரியுமா? ஆம் அவர் தாய், தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்று பிள்ளையார் என குறிப்பிடப்படுகிறார்.
- பிள்ளையாருக்கு வேறு தெய்வங்களைப்போன்று உருவங்கள் சிற்ப முறையில் செய்து வழிபட தேவையில்லை என்பதற்காக மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் அவ்வடிவத்திலேயே அருளுவார்.
- சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாக கிடைக்கும் பொருட்களை கொண்டு அடியார்கள் அவரை வணங்குவார்கள்.
- விநாயகருக்கு அருகம்புல் மிக விருப்பம், இந்த எளிதாக கிடைக்க கூடிய புல்லை வைத்து வணங்கினால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.