விஜய் நடித்த ’வாரிசு’ மற்றும் அஜித் நடித்த ’துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகுமா?

Nila
3 years ago
விஜய் நடித்த ’வாரிசு’ மற்றும் அஜித் நடித்த ’துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகுமா?

விஜய் நடித்த ’வாரிசு’ மற்றும் அஜித் நடித்த ’துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் திருநாளில் வெளியாகவிருப்பது உறுதி செய்யப்பட்ட போதிலும் இன்னும் சரியான ரிலீஸ் தேதி இரு தரப்பிலும் அறிவிக்கப்படவில்லை என்பது தெரிந்ததே.

’வாரிசு’ மற்றும் ’துணிவு’ ஆகிய இரு படங்களின் தரப்பினர்கள் இதுகுறித்து கூறியபோது சென்சார் சான்றிதழ் பெற்ற பிறகே ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

இருப்பினும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலின்படி ’வாரிசு’ திரைப்படம் ஜனவரி 12-ஆம் தேதியும் ’துணிவு’ திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சிலர் வியாழக்கிழமை சென்டிமென்ட் படி ’துணிவு’ திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என்றும் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக தான் அதிக வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

வெளிநாட்டு விநியோகிஸ்தர்களை பொருத்தவரை அவர்களுக்கு ’வாரிசு’ மற்றும் ’துணிவு’ ஆகிய இரண்டு படங்களுமே ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்றுதான் கூறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதே நேரத்தில் இரு படத்தின் குழுவினர்களும் அதிகாரபூர்வமாக ரிலீஸ் தேதியை அறிவித்தால் மட்டுமே ’துணிவு’ மற்றும் ‘வாரிசு’ ஒரே நாளில் ரிலீஸ் ஆகுமா? அல்லது அடுத்தடுத்த நாளில் ரிலீஸ் ஆகுமா? என்பது தெரியவரும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4