அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா தங்களது எல்லைப்படை வீரர்களை கட்டுப்படுத்த வேண்டும் - சீனா கோரிக்கை
அருணாச்சலபிரதேசத்தில் உள்ள யங்ட்சி பகுதியில் இந்தியா மற்றும் சீனாவின் எல்லை கட்டுப்பாட்டு கோடு உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நமது நாட்டின் எல்லை பகுதிக்குள் சீன படைகள் அத்துமீறி நுழைய முயன்றுள்ளனர்.
இதனை பார்த்த இந்திய வீரர்கள் அவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இதில் இரு நாட்டின் வீரர்களும் காயம் அடைந்தனர். ஆனால் இந்திய படைகள் தங்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் இதுகுறித்து அந்நாட்டு ராணுவத்தின் மேற்கு பிரிவு செய்தி தொடர்பாளர் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருந்ததாவது, “எங்கள் நாட்டின் வீரர்கள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இந்திய வீரர்கள் அத்துமீறி எல்லையை கடந்து எங்கள் வீரர்களை தடுத்துள்ளனர். இந்த சூழ்நிலையில் எங்கள் வீரர்கள் சக்தி வாய்ந்த நடவடிக்கைகள் மூலம் எதிர்கொண்டனர்.
எனவே இந்தியா தங்கள் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை கண்டிப்புடன் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் எல்லை அமைதியை காக்க இந்தியா எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.



