ரஸ்யா மற்றும் பெலாரஸ் இராணுவ வீரர்கள் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் கூட்டுப்போர் பயிற்சி

Kanimoli
2 years ago
ரஸ்யா மற்றும் பெலாரஸ் இராணுவ வீரர்கள் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் கூட்டுப்போர் பயிற்சி

உக்ரைன் மீதான ரஸ்யாவின் ஆக்கிரமிப்பு போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ரஸ்யா மற்றும் பெலாரஸ் இராணுவ வீரர்கள் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இரு நாடுகளின் போர்பயிற்சி காணொளிகளை ரஸ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ரஸ்யா - பெலாரஸ் எல்லையில் உள்ள வனப்பகுதியில் இருநாட்டு வீரர்களும் இரவு பகலாக போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

மேலும் வனப்பகுதியில் தற்காலிக பாலம் அமைத்து, அதனை வெடி வைத்து தகர்க்க, வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் புதிய தாக்குதல் வழிமுறைகளை ரஸ்யா பின்பற்ற அதிக சந்தர்ப்பம் உள்ளதாகவும் இது உக்ரைனுக்கு பாரிய சவாலாக அமையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!