சுவிட்சர்லாந்தில் ஓநாய்களை சுட்டு கொல்வதற்கு நாடாளுமன்றின் ஊடாக அனுமதி

Kanimoli
1 year ago
சுவிட்சர்லாந்தில் ஓநாய்களை சுட்டு கொல்வதற்கு நாடாளுமன்றின் ஊடாக அனுமதி

சுவிஸ் அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு – “கண்ட இடத்தில் சுட்டுக்கொல்லுங்கள்” சுவிட்சர்லாந்தில் ஓநாய்களை சுட்டு கொல்வதற்கு நாடாளுமன்றின் ஊடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நோக்கில் ஓநாய்களை சுட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்கு ஆபத்து ஏற்படும் என கருதப்பட்டால் அந்த சந்தர்ப்பங்களில் துப்பாக்கியினால் ஒநாய்களை சுட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 104 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

சுவிஸ் அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு – “கண்ட இடத்தில் சுட்டுக்கொல்லுங்கள்”
குறிப்பிட்டளவு கால்நடைகளுக்கு தீங்கு விளைவித்தால் மட்டுமே தற்போதைய சட்டத்தின் கீழ் ஓநாய்களை கொல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஓநாய்கள், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பாரியளவில் ஆபத்துக்களை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் தற்போதைய ஓநாய்கள் எண்ணிக்கை மூன்று ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.