சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வாரிசு பட தயாரிப்பாளரின் கருத்து!

Nila
3 years ago
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வாரிசு பட தயாரிப்பாளரின் கருத்து!

விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும்பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள உள்ளன.

இரண்டும் முன்னணி கதாநாயகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் போட்டி நிலவி வருகிறது.

 மேலும், இப்படங்களின் தொடர் அப்டேட்கள் இணையத்தை ஆக்கிரமித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றது.

இந்தநிலையில், 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு வழங்கியுள்ள நேர்காணல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதில், "விஜய் தமிழ் நாட்டின் மிகப்பெரிய நடிகர்களில் முதன்மையானவராக இருக்கிறார். அது அனைவருக்கும் தெரியும். அவருக்கு அடுத்த இடத்தில்தான் அஜித் இருக்கிறார். இரண்டு படங்களுக்கும் தலா 400 திரையரங்குகள் ஒதுக்குவது சரியாக இருக்காது. துணிவு திரைப்படத்தை வெளியிடும் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டுமென பேசப்போகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றதுடன், நெட்டிசன்கள் பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4