பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள் - பாகம் -06
#spiritual
#God
#Pillaiyar
Mugunthan Mugunthan
1 year ago
- பிள்ளையார் தமிழ்நாட்டில் மட்டுமல்ல வட இந்தியாவிலும் வழிபடப்படுகிறார். சான்றாக அங்கு அவர் தன் கரங்களில் முள்ளங்கியையும், தமிழ்நாட்டில் மோதகத்தினையும் வைத்துள்ளார்.
- திருஷ்டி பிள்ளையார் என விநாயகப்பெருமானை திருஷ்டிகளை விரட்டும் யந்திரத்தை செப்புத்தகட்டில் வரைந்து விநாகயக சதுர்த்தியன்று புசை செய்து கண்திருஷ்டி வராது வீட்டு வாசலில் சட்டமிட்டு மாட்டலாம்.
- பிள்ளையார் அதாவது கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை அதிகாலை 4.30 முதல் 6.00க்குள் உச்சரிப்பது மிகவும் நல்லது என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்படுகிறது.
- விநாயகரை தேய்பிறை சதுர்த்திகளில் வழிபடும் போது சங்கடகர சதுர்த்தி என்று அழைக்கப்படும். இந்நாளில் வன்னி மரத்தடியில் வழிபடுவது மிக நன்று.
- பிள்ளையார் திருமணம் ஆகாதாவர் என்று எண்ணலாகாது. அவருக்கு 15 மனைவி உண்டு என புராணம் கூறுகிறது. வட இந்தியாவில் இக்குறிப்பு காணப்படுகிறது. சித்தி, புத்தி, வல்லமை, மோதை பிரமேதை, சுமகை, சுந்தரி, மனோரனம், மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திரை, நந்தினி, காமதை என 15 பெண்களை திருமணம் செய்துள்ளார்.