பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள் - பாகம் -07

#spiritual #God #Pillaiyar
பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள் - பாகம் -07
  1. ஜப்பானிலும் விநாயகர் வழிபாடு உள்ளது. அங்கு வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஆரத்தழுவிக் கொண்டிருப்பதை போன்ற உருவம் கொண்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்கே காணப்படுகிறது. இந்த விநாயகரை வழிபாடு செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என நம்புகின்றனர்.
     
  2. விநாயக சதுர்த்திகளில் கோவிலுக்கு சென்று விநாயகப்பெருமானுக்கு எட்டுக் கொழுக்கட்டை செய்து தானமளித்தால் வறுமைகள் நீங்கி வளம் பெருகும்.
     
  3. சாத்துார் பிள்ளையாரை தீக்குச்சி கொழுத்தி வழிபாடு செய்து விபத்து நேராமல் துணை செய்ய பிரார்த்திப்பர். அவ்வாறே திருப்பனையுரில் இந்த பிள்ளையாரை பிராத்தனை செய்தால் இறங்கும் பெருஞ் செயலில் பிள்ளையார் துணையாக இருபபார்.
     
  4. வசிஷ்ட முனிவரின் மனைவியான அருந்ததியே முதன்முதலில் பிள்ளையாருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டவர்.
     
  5. சுவாமிமலையில் கொங்கு நாட்டு பிறவிக் குருடனுக்கு கண்பார்வை வழங்கி அருள்புரிந்த பிள்ளாயார் உள்ளார். கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்க இவரை வழிபடலாம்.