பிள்ளையார் பற்றிய இன்றைய 5 தகவல்கள் - பாகம் -10
#spiritual
#God
#Pillaiyar
Mugunthan Mugunthan
2 years ago

- பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே பீடம் ஒரே நேரம் என்று புசை செய்தல் கணபதி புஞ்சாயதனம் என்பர். இதன் போது பிள்ளையார் ஐம்முர்த்திகளின் நடுவில் இருப்பார்.
- தேரெழுந்துாரின் விநாயகர் திருஞானசம்பந்தருக்கு சிவாலயத்தின் வழி காட்டியதா்ல் இப்பெயர் பெறுகிறார்.
- ஸ்ரீ பவிஷ்ய புராணத்தில் பிள்ளையாரை வெள்ளை எருக்கம் வேரால் பத்மாசனத்தில் அமரந்த கோலத்தில் செய்து மூல மந்திரத்தால் வழிபட்டு வந்தால் சகல பலனும் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- ரண மோட்சக்கணபதி அடியார்களின் தரித்திரத்தை நீக்கி ஆயுளையும் செல்வத்தையும் உடற்சுகத்தையும் அருள்பவராவார்.
- நாம் இதுவரை விநாயகர் என்று கூறிவருகிறோமே அதன் பொருள் என்ன தெரியுமா? ”வி” என்றால் இதற்கு மேல் இல்லை என பொருள்படும். நாயகர் என்றால் தலைவர் எனப்பொருள். இவருக்கு மேல் பெரியவர் இல்லை என பொருள் படவே விநாயகர் என பெயர் வந்தது.



