மலேசியா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

Prasu
2 years ago
மலேசியா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள பதங்கலி நகரில் தனியார் வேளாண் பண்ணை உள்ளது. 

இந்தப் பண்ணை அருகே கூடாரம் அமைத்து பலர் தங்கிருந்தனர். இதற்கிடையே, இன்று அதிகாலை இந்தப் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. 

இதில் 79 பேர் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 26 பேரை உயிருடன் மீட்டனர். 

நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 79 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. 

இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 25 பேர் மீட்கப்பட்டனர். மாயமானோரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!