யூத சமூக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இசைக்கேற்ப நடனமாடி அசத்திய மன்னர் சார்லஸ்(வீடியோ)

Prasu
2 years ago
யூத சமூக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இசைக்கேற்ப நடனமாடி அசத்திய மன்னர் சார்லஸ்(வீடியோ)

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர் அரியணை ஏறிய மன்னர் 3-ம் சார்லஸ் நாடு முழுவதும் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் லண்டனில் உள்ள யூத சமூக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்னர் 3-ம் சார்லஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அப்போது 74 வயதான மன்னர் சார்லஸ் அங்கிருந்த நபர்களுடன் சேர்ந்து இசைக்கேற்ப நடனமாடி அசத்தினார். மன்னர் உற்சாகமாக நடனமாடிய அந்த வீடியோ பக்கிங்ஹாம் அரண்மனையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. 

வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே 2 லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த வீடியோவை பார்த்தனர். மேலும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!