நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் சகோதரர் அபூபக்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Prasu
3 years ago
நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின்  சகோதரர் அபூபக்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நடிகை குஷ்புவின் சகோதரர் அபூபக்கர் இன்று மரணமடைந்திருக்கிறார். இந்த துயர செய்தியை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு தனது சகோதரர் அபூபக்கரின் உடல்நிலை சரியில்லை எனவும் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும், அவரது உடல்நிலை சீராக பிரார்த்திக்கும்படியும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், இன்று தனது சகோதரர் அபூபக்கர் மரணமடைந்ததாக குஷ்பு ட்வீட் செய்திருக்கிறார். இந்த செய்தியில்,"உங்கள் அன்புக்குரியவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அதே வேளையில், விடைபெறும் நேரம் வரும். என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது. அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் எப்போதும் நமக்கு இருக்கும். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் சொல்வது போல், வாழ்க்கையின் பயணம் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது. அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், திரையுலகினர் மற்றும் தலைவர்கள் அபூபக்கரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4