எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் கண்ணதாசன்.
எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் கண்ணதாசன்.
அந்தப் பாடல் ஆறு மனமே ஆறு இது ஆண்டவன் கட்டளை ஆறு
என்ற இந்தப் பாடல்
1.தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச்சுடும் (293)
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி....
2 .இன்பத்துள் இன்பம் விளையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்.(629)
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
3. இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கு தன்சொலால் தான்கண் டனைத்து இவ்வுலகு.(387)
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உயிர்கள் உன்னை வணங்கும்.
4. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மானப் பெரிது. (124)
நிலைத் திரியும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும்.
5. அழுக்காறு அவா வெகுளி இன்னாசொல் நான்கும் இழுக்காறு இயன்றது அறம். (35)
ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்.
6அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. (80)
7. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை சேய்நன்றி கொன்ற மகற்கு.(110)
8. கண்ணோட்ட மென்னும் கழிபெறும் காரிகை
உண்மையா னுண்டிவ் வுலகு. (571)
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
கண்ணதாசன் திருக்குறளையும் விட்டு வைக்கவில்லை தனது பாடல்களில். இறைவன் அளித்த ஈடிணையில்லாக் கவிஞன்.