தாய்லாந்து போர்க்கப்பல் கவிழ்ந்ததில் 31 பேரை காணவில்லை

Nila
1 year ago
தாய்லாந்து போர்க்கப்பல் கவிழ்ந்ததில் 31 பேரை காணவில்லை

தாய்லாந்து வளைகுடாவில் ஏற்பட்ட புயலின்போது, 100க்கும் மேற்பட்ட பணிக்குழாமினருடன் சென்ற போர்க்கப்பலொன்று மூழ்கியதில், 31 கடற்படையினர் காணாமல்போயுள்ளதாக தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது.

நேற்று இரவு மின் கட்டுப்பாட்டு அறைக்குள் தண்ணீர் புகுந்ததால் 'HTMAS சுகோதாய்' என்ற இந்த கப்பல் கட்டுப்பாட்டை இழந்து மூழ்கியது.

விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து இன்று 75 பணியாளர்களை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், கொந்தளிப்பாக உள்ள கடலில் 31 பேர் இன்னமும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 மணி நேரத்திற்கும் மேலாக தேடுதல் நடத்தியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தொடர்ந்து தேடல் முன்னெடுக்கப்படுவதாக தாய்லாந்து கடற்படை செய்தித் தொடர்பாளர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கப்பல் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கப்பலுக்குள் தண்ணீர் புகுந்ததால் மின்சார சக்தி கட்டுப்பாட்டு அறையில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் மின்சார இணைப்பு இழக்கப்பட்டதால் கப்பலின் கட்டுப்பாட்டை தக்கவைத்து கொள்ள, கப்பல் மூழ்குவதற்கு முன்னதாக பணிக்குழுவினர் கடுமையாக போராடியதாக கடற்படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்று புயலில் சிக்கியபோது, கப்பல் பிரசுவாப் கிரி கான் மாகாணத்தில், பேங் சபானுக்கு மேற்கே 32 கிமீ (20 மைல்) தொலைவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது.

இதேவேளை, மீட்புக் கப்பல்கள் தொடர்ந்தும் தேடல் பணிகளை முன்னெடுத்துவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!