கடலில் முழ்கிய தாய்லாந்து கப்பல் காணாமல் போன மாலுமிகளை தேடும் பணிகள் ஆரம்பம்
Kanimoli
2 years ago

தாய்லாந்து கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஆழ்கடலில் கவிழ்ந்ததில் காணாமல் போன 31 மாலுமிகளை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று (18) இரவு தாய்லாந்து வளைகுடாவில் நிலப்பரப்பில் இருந்து சுமார் 32 கிலோமீற்றர் தொலைவில் கடலில் கண்காணிப்புக்கு சென்று கொண்டிருந்த கப்பல் புயல் காரணமாக கவிழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அப்போது, கப்பலில் சுமார் 100 மாலுமிகள் இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக கப்பலுக்குள் தண்ணீர் புகுந்ததால் இன்ஜின் அறையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, நிவாரணக் குழுக்கள் 75 மாலுமிகளை மீட்டுள்ளதாகவும், மேலும் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



