டுவிட்டர் CEO பதவியில் இருந்து எலான் மஸ்க் விலக நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 57.4 சதவீதம் பயனர்கள் ஆதரவு

Prasu
1 year ago
டுவிட்டர் CEO பதவியில் இருந்து எலான் மஸ்க் விலக நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 57.4 சதவீதம் பயனர்கள் ஆதரவு

அமெரிக்காவின் பல்வேறு செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் பலரின் டுவிட்டர் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு முடக்கியது. 

டுவிட்டரின் இத்தகைய செயல்பாடுகள் மன உளைச்சலை தருவதாக ஐ.நாவின் உலகளாவிய தகவல் தொடர்புகளுக்கான துணைப் பொதுச்செயலாளர் மெலிசா பிளெமிங் தெரிவித்திருந்தார். 

எலான் மஸ்க் தனது டெஸ்லா மின்சார கார் நிறுவனத்தின் 2 கோடியே 20 லட்சம் பங்குகளை 3.58 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ.29,743 கோடி) கடந்த 3 நாட்களாக விற்றது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

டுவிட்டர் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்துவரும் எலான் மஸ்க், தொடர்ச்சியாக டுவிட்டரின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவை கலைத்தார். 

டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்ற விரும்பவில்லை எனவும் அவர் கூறியிருந்தார். 

அந்த வேலைக்கு வேறு ஒருவரை நியமிப்பேன் என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், 'டுவிட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா?' என ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். 

கருத்துக் கணிப்பு முடிவைக் கடைப்பிடிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். இந்நிலையில், எலான் மஸ்க்கின் இந்தக் கேள்விக்கு 57.6 சதவீதத்திற்கும் அதிகமான பயனர்கள் 'ஆம்' என்றும், சுமார் 42.4 சதவீதம் பேர் 'இல்லை' என்பதையும் கிளிக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!